பேலியகொடவை விட மிகப் பெரிய கொத்தணி உருவாகினால்..? அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பகிரங்க எச்சரிக்கை.!!

பேலியகொட கொரோனா கொத்தணியை விட மிகப் பெரிய கொத்தணி உருவாகினால், சுகாதார கட்டமைப்பினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்படியான நிலைமை ஏற்பட்ட முழு நாடும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது நோய் தொற்றுக்கு உள்ளான சில கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மினுவங்கொடை கொத்தணியில் இது ஆரம்பமானது.அதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தின் கப்பல் தடாகத்தின் கொத்தணி, மத்துகமை அகலவத்தை கொத்தணி உருவானது.குளியாப்பிட்டியவில் கொத்தணி உருவானது. கஹாத்துடுவையில் ஓரளவு ஆபத்து உருவாகியுள்ளது. இவ்வாறு பல உப கொத்தணிகள் உருவாகி வருகின்றன.பேலியகொடை கொத்தணி போல் திடீரென மிகப் பெரிய கொத்தணி ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு முழு நாடும் மாறும்” மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.இதனால், கொத்தணிகள் உருவாகும் நிலைமைக்கு வேலைகளை செய்யாது இருக்க வேண்டும் எனவும் கொத்தணிகளை முடிவுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய கடமை எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.