இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்.!! கொத்தணிகளில் இருந்து தப்பிய இரு மாவட்டங்கள்.!!

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணிகளில் இருந்து பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 23 மாவட்டங்களில் இருந்து, 5 ஆயிரத்து 97 நோயாளிகள் – 634 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து எவ்வித தொற்றுக்களும் பதிவாகவில்லை என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.