பிறக்கும்போதே பற்களுடன் பிறந்த பெண் குழந்தை…!

காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மா.கொளக்குடி எல்.இ.பி.நகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. அவரது மனைவி நிவேதா.இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் 2-வதாக கர்ப்பமான நிவேதாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம் நடந்தது.