வெள்ளவத்தை – கொலிங்வூட் பிளேசில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம்..!!

வெள்ளவத்தை – கொலிங்வூட் பிளேசில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் உள்ள தொடர்மாடியொன்றில் வசித்து வந்த இந்தியப் பிரஜையொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரை கந்தக்காடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை பேலியகொட மீன் சந்தையின் சோதனைச் சாவடியில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் களனி முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.