இலங்கையின் குட்டி லண்டனிலும் 30 பேருக்கு கொரோனா.!! எவரையும் சுற்றுலா செல்ல வேண்டாமெனவும் அறிவிப்பு..!

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் சுமூகமாகும் வரை நுவரெலியா மாவட்டத்திற்கான சுற்றுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார்.