கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறதா? இராணுவத்தளபதியின் தகவல்.!

கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பிலான தகவல்களை மூடி மறைப்பதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்றைய தினம் காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கொவிட்-19 இன்னும் இலங்கையில் சமூகத் தொற்றாக பரவவில்லை. நிபுணத்துவ மருத்துவர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொவிட் மரணங்கள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளிவருவதில்லை எனவும் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை.