கொரோனா தொற்று அபாயத்தால் யாழில் முடக்கப்பட்ட மற்றுமொரு கிராமம்..!!

கரவெட்டி ராஜகிராமத்தின் கணிசமான பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த மூவர் நேற்று யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் ராஜகிராமத்தை சேர்ந்தவர்.அந்தப் பகுதியில் நெருக்கமான மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன. தொற்றுக்குள்ளானவர் பல வீடுகளிற்கு சென்று வந்திருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில், ராஜகிராமத்தின் பல பகுதிகள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் வீடுகளிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெளியார் கிராமத்திற்குள் நுழையவோ, கிராமத்திலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.