மத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.!!

மத வழிபாடுகளில் பங்கேற்பவர்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
நாட்டில் மதவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் உச்சபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை 50ஆக பேண வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.நாளைய தினம் பௌர்ணமி தினம் என்பதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவொரு நிகழ்வும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரையில் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார சட்டதிட்டங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.