விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி…36 வகையான பயிர் வளர்ப்புக்கு ரூ. 5 இலட்சம் வரை விவசாயக் கடன்..!!

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ள இக்கடனின் மீளச் செலுத்தும் காலம் 09 மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடன் திட்டத்திற்கு அமைவான பயிர்கள்:நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி, கோவா, கரட், கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு.அத்துடன் சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின் கீழான கடன்:நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க உச்சபட்சமாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவியை 4% வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடனாக வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கு அரசாங்கத்தின் மூலம் 5% வீத பங்களிப்பும், கடன் பெறுனரிடமிருந்து 4% வட்டியும் அறவிடப்படும் என, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.