இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.!!

மூன்று மாதங்கள் ஆன பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இலங்கையில் பதிவாகியுள்ளது.


மத்துகமவெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால்,வெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவிட்ட,மாகலந்தாவ என்னும் பகுதியைச் சேர்ந்த சிசுவிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த சிசுவின் தாய்க்கும் கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சைகளுக்காக தாயும்,சேயும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.இலங்கையில் பதிவான மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக இந்த சிசு பதிவாகியுள்ளது.ஏற்கனவே ஆறு மாத சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமையே நாட்டில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.