பி.சி.ஆர். பரிசோதனையில் வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா தொற்று உறுதி..!!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் ) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,”குறித்த மூன்று தொற்றாளர்களும் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்தவர்கள். தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 243 பேருக்கான கொரோனாத் தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.