தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி வழங்கத் தயாரான நிருபருக்கு திடீரென ஏற்பட்ட கதி.!!

அர்ஜெண்டினாவில் தொலைக்காட்சியில் லைவ் நிகழ்ச்சி வழங்க தயாரான நிருபரிடம் இருந்து மொபைல் கைப்பேசியை மர்ம நபர் பறித்துச் சென்றார். அர்ஜெண்டினா நாட்டில் என் விவோ எல் நுயீவ் என்ற தொலைக்காட்சி நிலையத்தில் நிருபராக பணியாற்றி வருபவர் டீகோ டிமார்கோ. இவர் சராண்டி நகரில் லைவ் நிகழ்ச்சி ஒன்றை வழங்க தன்னை தயார்படுத்தி கொண்டு இருந்துள்ளார்.அந்த வழியே வந்த மர்ம நபர் ஒருவர் டீகோவிடம் இருந்த மொபைல் போனை திடீரென பறித்து கொண்டு ஓட தொடங்கினார். இதனால் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த டீகோ பின்னர் போனை பறித்து தப்பிய நபரை துரத்தியுள்ளார்.எனது போன் திருடப்பட்டு உள்ளது என ஸ்பானிஷ் மொழியில் கத்தி கொண்டே டீகோ ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் அருகேயிருந்தவர்கள் இதனை கவனித்து உதவிக்கு வந்து அந்த நபரிடம் இருந்து மொபைல் போனை ஒரு சில நிமிடங்களில் திரும்ப கொண்டு வந்து டீகோவிடம் ஒப்படைத்துள்ளனர்.தனது போன் கிடைத்த திருப்தியில் அந்த நபர் மீது பொலிஸாரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என டீகோ கூறியுள்ளார்.