இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000 ஐயும் தாண்டியது..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 9000 ஐ தாண்டியுள்ளது.தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 211 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களை உள்ளடக்கிய நிலையில் 9000 ஐ தாண்டியுள்ளது. மினுவாங்கொடையில் உள்ள கொரோனா கொத்தணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5607 ஆக உயர்ந்துள்ளது.இதன்மூலம் இலங்கையில் இப்போது 9,081 கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.புள்ளிவிபரங்களின் படி, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் 4,075 பேர் வைரஸிலிருந்து முழுமையான மீண்டுள்ளனர்.4,987 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.