பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அழகான தருணங்கள்.!! வைரலாகும் புகைப்படம்.!

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்றது.இது தொடர்பில் அசராசங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நாமல் ராஜபக்க்ஷ தனது தந்தை மகிந்த ராஜபக்க்ஷவுடன் ஹாயாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.இதேவேளை, ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தை பகிர்ந்து கொள்ளும் ஆடம்பரம் எனக்கு இல்லை, ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன.இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பிஸியான கால அட்டவணையில் ஓய்வு நேர அரட்டையடிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சிறந்தது. சமூக தூரத்தை பராமரிக்கும் போது தனிமைப்படுத்தப்பட்ட நேரங்கள் என நாமல் ராஜபக்க்ஷ தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.