மேல்மாகாணத்தில் அமுலுக்கு வரும் ஊரடங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி விடுக்கும் முக்கிய வேண்டுகோள்..!!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். மேல் மாகாணத்தில் நாளை விதிக்கப்படும் ஊரடங்கு சட்டம் தற்காலிகமானதே. திங்கட்கிழமையுடன் அது நீக்கப்படும்.மேல் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்வதால் அங்கும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் அதிகரிக்கலாம்.
எனவே, ஊரடங்கு அமுலில் இருக்கும் 3 தினங்களுக்கும் மேல் மாகாணத்தில் தங்கி இருக்குமாறு இராணுவ தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.