கொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா.!! திருமண ஹொட்டலுக்கு சீல் வைப்பு.!! 130 பேர் தனிமைப்படுத்தல்.!

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிலியந்தல பிரதேசத்தில் உள்ள தெல்தர பெரடைஸ் என்ற ஹோட்டலே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திருமண நிகழ்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அங்கு சென்றுள்ளார்.

அங்கு கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தவலுக்கமைய அந்த இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகரின் கடமைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயற்பட்டுள்ளார்.மணமகனின் தந்தையே குறித்த கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது.ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்ட பின்னர் திருமணத்தில் கலந்து கொண்ட 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மணமகனின் தந்தை திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக பல வீடுகளுக்கு சென்றுள்ளார்.அத்துடன் அடுத்த நாள் அவர் திருமணம் இடம்பெற்ற பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.