இனிவரும் நாட்களில் மிக அவதானமாக இருங்கள்…யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!

யாழ். குருநகர் மற்றும் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் எச்சரித்துள்ளார்.இதேவேளை மீன் சந்தைகளில் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து அங்கு அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்;பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்.குருநகர் மற்றும் பாசையூர் மீன் சந்தை பகுதியைச் சேர்ந்தவர்களோ அல்லது வெளியிடங்களிலிருந்து வருவோர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.குறித்த நடைமுறை இன்று காலையிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.எனவே இப்பகுதிக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.