கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் இடைநடுவில் சிக்கித் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கையர்கள்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் இலங்கையர்கள் நிர்க்கதியாகி உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில சிக்கியிருக்கும் இலங்கையர்கள் 59 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களை, தங்களை நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பதிவு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய இதுவரையில் 59,419 பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 21,575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக வழங்கப்படும் ஆதரவினை விரைவுபடுத்த வெளியுறவு அமைச்சு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.இதற்கான கலந்துரையாடல் ஒன்று வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்றுள்ளது.அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சினை ஒப்பந்தங்களின் இழப்பு, பணி அனுமதிகளை நீடித்தல் மற்றும் வேலைவாய்ப்பை தற்காலிகமாக நிறுத்துதல் ஆகியவவை தொடர்பில் இந்த கூட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தீர்வு வழங்குவதாக வெளிவிவகார செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.