கொரோனா அச்சுறுத்தல்- யாழ்.நகரில் பொலிஸாரின் விழிப்புணர்வு நடவடிக்கை!

யாழ்ப்பாணப் பொலிசாரினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன, யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவில யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் யாழ்ப்பாண பொலிசார் கலந்துகொண்டு யாழ்.நகரில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஸ்ரிக்கர்கள் பேருந்தில் ஒட்டப்பட்டது.மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.