இலங்கையில் நேற்று மட்டும் 457 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இதன்மூலம், இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 8 பேரும், தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 156 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5396 ஆக உயர்ந்துள்ளது.நாட்டில் இதுவரை 8870 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4043. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4808 ஆகும்.