இரத்மலானையில் பெண் நிறைவேற்று அதிகாரியான பெண்ணுக்கும் கணவனுக்கும் கொரோனா தொற்று.!!

இரத்மலானையிலுள்ள ஆடை தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரியான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.பொலிகஸ்ஓவிட்ட குடமாதுவ பிரதேசத்தை சேர்ந்த இந்த அதிகாரியின் கணவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.அவர் கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் என தெரியவந்துள்ளது. அவர் இதற்கு முன்னரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக தெரிய வருகிறது.

அத்துடன் குடமாதுவ பிரதேசத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா பரவலுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.தெரியவந்துள்ளது. அவருக்கு அருகில் செயற்பட்ட 24 பேரை சுய தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.