200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் கடவுள் காட்டிய விளையாட்டு.? திண்டாடிப் போன நாஸா.!!

இந்தப் பூமி எப்படி தோன்றியது என்ற விடையத்தை, இன்றுவரை விஞ்ஞானிகள் சரியாக கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அதற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது பினு என்னும் ஒரு விண் கல். ஏன் எனில் பூமி தோன்றிய காலத்தில் இருந்து சஞ்சரித்த இந்த பினு என்னும் விண் கல். கடைசிவரை எந்த ஒரு கிரகத்துடனும் இணையவில்லை. தனியாக, தனக்கு என்று ஒரு வட்டப் பாதையில் அது சூரிய குடும்பத்தை இன்று வரை சுற்றி வருகிறது.200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள அந்த பினு என்னும் விண் கல் மீது, நாசா 23ம் திகதி ஒரு சாட்டலைட்டை தரை இறக்கியது. அது குறித்த பாறையை குடைந்து, துகள்களை எடுத்துவிட்டது. ஆனால், துகள்களை எடுத்த பின்னர், மூடவேண்டிய சிறிய கதவு சரியாக மூடவில்லை என்று நாசா அறிந்துள்ளது. இதனால் எடுக்கப்பட்ட துகள்கள் விண் வெளியில் சிதறும் வாய்ப்பு உள்ளது.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், எமது சூரிய குடும்பத்தில் பல வகையான எரி வாயுக்கள் காணப்பட்டது.அந்தக் காலத்தில் எமது சூரிய குடும்பத்தில் சூரியனும் இல்லை பூமியும் இல்லை. வெறும் அண்டவெளி தான். அந்த வாயுக்கள் ஒரு கட்டத்தில் திடீரென தீ பற்றி வெடித்தது. இதனை தான் சூப்பர் நோவா என்று அழைப்பார்கள்.இதனால் ஏற்பட்ட பாரிய வெப்பம், வாயுக்களை, பாறைகளாக மாற்றியது. பல வித்தியாசமான பாறைகள் பல மைல் தொலைவுக்கு விண் வெளியில் உண்டாகியது. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான கனிம வழங்களை கொண்டவையாக இருந்தது. அவை பின்னர் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைய ஆரம்பித்ததோடு. அருகில் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால், சுழல ஆரம்பித்தது. இதனால் புவி ஈர்ப்பு விசை ஏற்பட்டு அருகில் உள்ள பல பாறைகள் ஒன்றாக இணைந்து கிரகங்கள் உருவெடுத்தது.அதன் பின்னரே பூமியில் வந்து விழுந்த ஒருவகையான ஐஸ் கட்டி பாறைகள் ஊடாக, பூமியில் நீர் தோன்றியது. தற்போது கூட ஒரு இதமான சூட்டில், தண்ணீரில் இடி மின்னல் அடிக்கடி விழுமே ஆனால். அதில் சக்சீனிக் அமிலம் என்னும் அசிட் தோன்றும். இது உருவாக பல மில்லியன் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இந்த சக்சீனிக் அமிலமே உயிரினம் தோன்ற மூல காரணியாக இருக்கிறது. இவ்வாறு தான் பூமியில் உயிரினம் தோன்றியது. பூமி தோன்ற முன்னர் ஏற்பட்ட சூப்பர் நோவா வெடிப்பின் போது ஏற்பட்ட பாறை தான் இந்த பினு. அதில் உள்ள மூலக் கூறுகள், பூமியின், முதல் மூலக் கூறுகளாக கூட இருக்கலாம்.இதன் காரணத்தால் தான் நாசா இன்றுவரை, குறித்த பினு என்னும் விண் கல் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. தற்போது 200 மில்லியன் மைல் தொலைவில் உள்ள குறித்த Osiris-Rex என்னும் சாட்டலைட், பூமி அருகாமையில் வரும் போது துகள்கள் அடங்கிய கலத்தை பூமி நோக்கி அனுப்பும். ஆனால் அது நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் அதனை சரிசெய்ய முடியும் என்று நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பினு என்னும் விண்கல்லை நோக்கி பயணித்து. தனது பாதை தவறாமல் குறித்த பாறையை அடைந்து. அதன் மீது இறங்கி, துகள்களை எடுத சாட்டலைட், மனிதர்கள் இட்ட கட்டளையை சரியாக நிறைவேற்றி உள்ளது.

இருப்பினும் ஒரு சிறிய தவறு நடந்த விடையம், மனிதர்களையும் மீறிய சக்தி ஒன்று உள்ளதா ? என்ற சந்தேகங்களை கிளப்பி உள்ளது. இந்த துகள்கள் பூமிக்கு வந்தால், எமது தோற்றம் எமது உருவாக்கம் குறித்த அதி முக்கியமான மற்றும், பரம ரகசியத்தை நாம் அறிந்து விடுவோம். ஆனால் அதற்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

நன்றி: Athirvu