இலங்கையில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பில் விரைவில் அமுலாகும் புதிய மாற்றம்.!

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் பரீட்சை நடாத்தும் செயன்முறையை நவீனமயப்படுத்தல் வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பிரதானமாக வருடாந்தம் பாடசாலைக் கல்வி தொடர்பான தேசிய பரீட்சைகள் 4ம் நிறுவன ரீதியான பரீட்சைகள் 325 உம் நடாத்தி வருகின்றது என அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டது.நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.குறித்த பரீட்சைகளை நடாத்துவதில் அதிக பணிகளை திணைக்களத்தின் பணியாளர்கள் பொதுவான அலுவலக முறைகளைக் கையாண்டு மேற்கொள்ளப்படுவதுடன், பரீட்சைகளின் துல்லியத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக பரீட்சை முறையை டிஜிட்டல் முறைமைப்படுத்தலின் தேவை தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் முகாமைத்துவ செயன்முறையை நவீனமயப்படுத்துவதற்காக தேவையான இணையத்தள வசதிகள் உள்ளிட்ட நவீன தொழிநுட்ப உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் குறித்த பயிற்சிகளை பணியாளர் குழாமைப் பயிற்றுவிப்பதற்கும், பரீட்சை மதிப்பீட்டுச் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக மாகாண மட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களை நிறுவுவதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.