மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படும் கொழும்பு மாநகர வீதிகள்..!!

கொழும்பு நகரங்கள் உட்பட புறக்கோட்டைப் பகுதி மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.புறக்கோட்டையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகவும் பாழந்து காணப்படுகின்றன. மிகவும் அரிதாக ஓரிரு வாகனங்களை காணமுடிவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், வெறிச்சோடிக் காணப்படும் கொழும்பு நகரின் புகைப்படங்கள் சில ஊடங்களில் வெளியாகியுள்ளன.