அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்…

அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அரச இயந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.நாள் ஒன்றுக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் யார் என தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானியிடம் வழங்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுபவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கயை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு திட்டத்தை வார இறுதியில் அரசாங்கம் அறிவிக்க உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.