கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையில் இரு பிரதேசங்கள் முழுமையாகத் தனிமைப்படுத்தப்படுத்தல்…

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த இரு பிரதேசங்களை முழுமையாக தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அக்குறன பிரதேசம் மற்றும் புத்தளம் கடமன்குளம் கிராமத்தின் ஒரு பகுதியை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று தொடர்ந்து பரவாமல் இருப்பதற்காக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அவ்வாறு மூடப்படும் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில பகுதிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவது மரணம் நேற்று சம்பவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.