கொரொனாவால் யாழில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல்..?

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.குருநகரிலுள்ள மீன் விநியோக நிறுவனமொன்றில் பணியாற்றும் இரண்டு பேர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் செல்லும் அவர்கள் கடந்த 23ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குருநகர் பருத்தித்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற போதும் அவர் கடந்த 13ஆம் திகதியே தனது வீட்டிற்கு சென்றார். அதன்பின் குருநகர் நிறுவனத்தின் விடுதியிலேயே தங்கியிருந்தார்.இரண்டு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டதையடுத்து பாசையூர் திருநகர் கிராமங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பாதைகள் மறிக்கப்பட்டுள்ளன.இதேவேளை இரண்டு கிராமங்களையும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்குமாறு மத்திய கொரோனா தடுப்பு செயலணியிடம் வடக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.எனினும் கொரோனா தடுப்பு செயலணி இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இதுவரை விடுக்கவில்லை.