உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஹற்றன் நகரம்!

ஹட்டன் நகரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


அதன்படிமீள் அறிவித்தல் வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.ஹட்டனில் பல கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நாட்டில் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.