கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை என்ன செய்வது? வைத்தியர்கள் எடுக்கவுள்ள முடிவு!

இலங்கையில் அடையாளம் காணப்படும் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யார் என்ற விடயம் தொடர்பில் மீளவும் ஆராய்ந்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு இந்த நிலைமை தொடர்பில் மீளவும் ஆராய்ந்து பார்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.


தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலைகளில் உள்ள இடவசதி எல்லையை மீறியுள்ளது.அதே போன்று தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இட வசதியும் எல்லையை மீறிச் சென்றுள்ளதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டியவர்களை பிரித்து   தெரிவு   செய்வதற்கு   அவசியமான    முறை    தொடர்பில் ஆராயப்படவுள்ளது.அத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைக்கமைய நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.நாட்டில் உள்ள வளங்களுக்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.