யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா!!

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவரும், முல்லைத்தீவு தனிமைப் படுத்தல் நிலையத்தில் இருந்த மற்றொருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் யாழ் போதனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இன்று மேற்கோள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரும் தென்பகுதியை சேர்ந்தவர்கள்.