யாழ் குருநகரில் இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கொரோனா தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வரும் கூலர் வாகன சாரதிகள் இருவரே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொற்று உறுதியாகியுள்ளது.இதேவேளை, கோப்பாய், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.