இலங்கையில் முதல் முறையாக 8 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளளான மேலும் 280 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களாகும். ஏனைய 265 பேர் மினுவாங்கொட, பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.அதற்கமைய மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலின் முழுமையான எண்ணிக்கை 4678 வரை அதிகரித்துள்ளது.இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முழுமையான எண்ணிக்கை 8152 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை 3933 ஆக அதிகரித்துள்ளது.தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4219 ஆக அதிகரித்துள்ளது.