யாழ்.பலாலி முகாமில் தனிமைப்படுத்தலில் மீதமுள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்றிருக்க வாய்ப்பு.!! நாளை முக்கிய பரிசோதனை…!!

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மிகுதி 4 நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க அதிகளவு சந்தர்ப்பம் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,நாளை குறித்த 4 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறும் போது;

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகியதற்காக தனிமைப்படுத்தல் 20 பேர் வைக்கப்பட்டனர்.அவர்களில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். 3ம் கட்டமாக 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தற்போது 4 பேர்மட்டுமே அங்குள்ள நிலையில்,அவர்களும் தொற்றுக்குள்ளாகியிருக்க 100 வீதம் வாய்ப்புக்கள் உள்ளது. அவர்களுக்கு நாளை பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. அந்த பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகவில்லை. என்றாலும் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருப்பர்.அவர்களுக்கான பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என கூறியுள்ளார்.