லேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா..!!

பொரளை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் ஏழு சிறுவர்களும், மூன்று தாய்மார்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.