அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் குறித்து வெளிவந்துள்ள பேரதிர்ச்சி தரும் தகவல்..!!

அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துர மதுஷ்சின் சொத்து மதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இந்நிலையில், 400 கோடி ரூபாய் பணம் செலவிட்டு அவர் குறித்த ஹோட்டலை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.60 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் நீச்சல் குளங்கள், நிகழ்வு மண்டபங்கள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த வருமானத்தில் இந்த ஹோட்டல் கொள்வனவு செய்வதற்கு மதுஷ் முதலீடு செய்யதுள்ளதாக தெரியவந்துள்ளது.மாகந்துரே மதுஷ் போலி பெயரில் விமான கடவுச்சீட்டு தயாரித்து டுபாய் நாட்டில் தங்கியிருந்தமையினால் அவர் இந்த ஹோட்டலை தனக்கு நெருக்கமான இந்திய நாட்டவர் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.