இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.!!

இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி ராகம வைத்தியசாலையில் பதிவாகியுள்ளார்.

இந்த சிசுவிற்கு ஆறு மாதங்களே என ராகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஆறு மாத சிசுவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.இந்த ப் பரிசோதனையின் போது, குறித்த சிசுவிற்கு கொவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த சிசுவிற்கு மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக அந்த சிசு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த சிசுவின் தந்தை பெஹலியகொட கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.