யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட பொறியியலாளரின் பி .சி.ஆர் பரிசோதனை முடிவுகள்.!!

நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,
அவரது துணைவி சட்டத்தரணியிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

சட்டத்தரணி தொடர்ந்து சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 14 நாள்களில் அவரிடம் இரண்டாவது தடவை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், அவர் கடந்த வாரம் நீதிமன்றுக்கு சென்று வந்த நிலையில், தற்போதைய நிலையில் மேலதிக நடவடிக்கைகள் என்றும் அதிகாரிகள் கூறினர்.சட்டத்தரணி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு செவ்வாய், புதன்கிழமை வருகை தந்துள்ளார்.அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றுக்கும் அவர் சென்றுள்ளார்.வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தில் பணியாற்றும் சாவகச்சேரி,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளரின் துணைவியே மேற்குறித்த சட்டத்தரணி என்பது குறிப்பிட்டத்தக்கது.