இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா.!! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்..!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 803 பேர் குணமடைந்துள்ள நிலையில், இன்னும் நாலாயிரத்து 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இதேவேளை, கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனையத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.