போலந்து ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தான் நலனாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

48 வயதுடைய அவருக்கு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவர் வைரஸால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தெளிவாகத் தெரியவில்லை.
கொரோனா தொற்று உறுதியாகிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகிய தலைவர்களுடன் போலந்து ஜனாதிபதியும் தற்போது இணைந்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போலந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 13,600 க்கும் மேற்பட்ட புதிய நாளாந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் உணவகங்களை ஓரளவு மூடுவதை உள்ளடக்கிய நாடு தழுவிய சிவப்பு அறிவித்தலுடன் முடக்கம் இப்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.