இலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 பேருக்கும், பேலியகொட மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.