மாலை 6 மணிக்கு அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு கோட்டை உட்பட நான்கு பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்..!!

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இன்று மாலை 6 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் .இதேவேளை, நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றையதினம் ஹட்டன், பொகவந்தலாவ மற்றும் கினிகத்தேன ஆகிய பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர்.மேலும், தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள வாழைச்சேனை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.