உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட வாழைச்சேனை.!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையிலேயே குறித்த பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.