இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்..!!

நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியான அனைவரும் ஏற்கனவே வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய தினம் இதுவரையில் 276 நோய்த் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தமாக 7429 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் இதுவரையில் பதிவாகியுள்ளனர்.மினுவன்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொத்தணிகளில் மட்டும், இதுவரையில் 3958 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.