நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரோனா பரிசோதனை செய்த போது 3 பேர் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை ) மேலும் 83 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இதுவரை நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 12 பேர் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.