இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!!

ஹொரண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலகல மேற்கு பகுதியில் இந்தக் குடும்பம் அடையாளம் காணப்பட்டது.சுகாதார ஊழியரின் குடும்பமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டது.

பெண் சுகாதர ஊழியர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.அவரது 12,15 வயதான மகன்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அவர்களின் 30 முதலாம் நிலை தொடர்பாளர்கள் பிசிஆர் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.