யாழ் மக்களிற்கு போதனா வைத்தியசாலை நிர்வாகம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம், விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத் தொகுதியில் எதிர்வரும் திங்கள் முதல் மருத்துவக் கிளினிக் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கவுள்ளன.இந்நிலையில், மருத்துவக் கிளினிக்கிற்கு வரும் பொதுமக்கள் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக உள்ள கட்டடத் தொகுதியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.