தமிழ் மக்களின் நலனுக்காக பாராளுமன்றில் குரல்கொடுத்த சகோதர மொழி பாராளுமன்ற பெண் உறுப்பினர்..!!

கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாக இருக்கின்றது இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தென்னிலங்கை சகோதரமொழி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது தமிழர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் மேலும்.

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பிலான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளது. தமிழ் மொழிரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.கொவிட் வைரஸுடனேயே நாம் அனைவரும் வாழவேண்டிய சூழல் உள்ளது. இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அல்ல. பூகோள ரீதியான தொற்றுநோயாகும்.சரியான தகவல்கள் இந்த வைரஸ் தொடர்பில் வைத்திய நிபுணர்களிடமும் இல்லை. வரலாற்றில் எந்தவொரு சுகாதார அமைச்சருக்கும் இல்லாத சவால் தற்போதைய சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கும் செவிகொடுக்க வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் காணப்படும் மோசமான நிலைமை காரணமாக அதற்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர்.கொவிட் வைரஸ் தொற்றுக்கொள்ளானவர்கள் மற்றும் இரண்டாம் நபர்கள் தொடர்பில் சமூகத்தில் பீதியொன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பிலான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளது தொடர்பில் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் கவனம் செலுத்தவுமில்லை, இந்த விடயம் தொடர்பில் பேசவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.