யாழில் இன்றைய கொரோனா நிலவரம்! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட பரிசோதனை முடிவுகள்..!

இன்றைய (16) தினம் யாழில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இன்று 20 பேருக்கு யாழில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையில் மூவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மூவர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 16 பேர் என மொத்தமாக இன்று 20 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.இதேவேளை யாழில் நேற்று இருவருக்கும் நேற்று முன்தினம் 8 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.