அரச ஊழியர்களுக்கான தங்கும் விடுதிக்கு வந்த பெண் அதிகாரியினால் பரபரப்பு.!! 14 நாட்களுக்கு விடுதியிலேயே தனிமைப்படுத்தல்..!

வெளி மாவட்டத்திலிருந்து யாழ்.மாவட்ட அரச ஊழியர்களுக்கான தங்கும் விடுதிக்கு வந்த அரச ஊழியரினால் ஏற்பட்ட பரபரப்பு நீங்கியுள்ளதுடன், குறித்த விடுதியிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் ஊழியரான குறித்த பெண் இன்று காலை அரச ஊழியர்களுக்கான தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அந்த பகுதிக்கு சுகாதார அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இதன்போது குறித்த பெண் தாம் எங்கிருந்து வந்தார் என்பது தொடர்பில் உறுதியான தகவல்களை கூறவில்லை என சுகாதார அதிகாரிகள் கூறினர்.மேலும், இறுதியாக தாம் மாத்தளை பகுதியிலிருந்து வந்த்தாக கூறியுள்ளார். இதனையடுத்து சுகாதார அதிகாரிகளினால் பாதுகாப்புக் கருதி14 நாட்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்ததங்கும் விடுதிக்குப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்.மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு வினவியபோது, அவர் மாத்தளைப் பகுதியில் இருந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதெனவும், மாத்தளைப் பகுதி அபாய வலயமாக இல்லாதபோதும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாம் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைக்கமைய தனிமைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.