பிரித்தானியாவில் ஒரேநாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றினால் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இதனால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இன்னமும் எதிர்வரும் நாட்களில் பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.இந்தநிலையில், பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 224பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து 30ஆயிரத்து 998பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44ஆயிரத்து 571பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 707பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.